தனியுரிமைக் கொள்கை
இலவச செக்கப் அல்லது வாட்ஸ்அப் மாஸ்டர்கிளாஸுக்கு பதிவு செய்யும்போது HabitEasy உங்கள் தகவலை எப்படி பயன்படுத்துகிறது.
புதுப்பிப்பு 27 September 2026
நாங்கள் யார்
HabitEasy என்பது Navvi Corporations நடத்தும் நலவாழ்வு பிராண்ட்; கட்டணம் மற்றும் பில்லிங் Navvi Corporations பெயரில் நடைபெறும். Navvi Corporations, Tirupur, Tamil Nadu, India — habiteasy.in (கல்வி), 10dc.habiteasy.in (10 நாள் சவால்), 5dwmc.habiteasy.in (5 நாள் வாட்ஸ்அப் மாஸ்டர்கிளாஸ்), மற்றும் checkup.habiteasy.in (15 நிமிட இலவச வெல்னஸ் செக்கப்).
தனியுரிமை கேள்விகளுக்கு WhatsApp 83006 26155. தனியா மெயில் இன்னும் இணைக்கலை.
என்ன தகவல் கேட்கிறோம்
ஸ்லாட்டை உறுதி செய்ய அல்லது joining details அனுப்ப தேவையானது மட்டும்.
- இலவச செக்கப்: பெயர், வாட்ஸ்அப் எண், விருப்ப நேரம், மொழி, உத்ம (UTM) குறி.
- மாஸ்டர்கிளாஸ்: பெயர், வாட்ஸ்அப் எண், ஊர், இலக்கு, UTM குறி.
- ஹோஸ்ட் (Vercel) பதிவு செய்யக்கூடிய IP, பிரவுசர் — சைட்டை ஓட்டவும் ஸ்பாமை தடுக்கவும்.
- குக்கீ / local storage: மொழி, இந்த பிரவுசரில் இந்த வாரம் புக் செய்ததா, நன்றிப் பக்கத்துக்கான குறுகிய பெயர் குக்கீ.
என்ன வேண்டாம்
மருத்துவ ரிப்போர்ட், பிரஸ்கிரிப்ஷன், லேப் ரிசல்ட், ஆதார் எண், விரிவான நோய் வரலாறு இந்த படிவத்தில் அனுப்பாதீர்கள். இது பொது வெல்னஸ் செக்; கிளினிக் கோப்பு இல்ல.
ஏன் பயன்படுத்துகிறோம்
இந்த தகவல்:
- 15 நிமிட ஸ்லாட் அல்லது வாட்ஸ்அப் கிளாஸ் joining-ஐ உறுதி செய்ய.
- இந்த முன்பதிவு / பேட்ச் பற்றி வாட்ஸ்அப்ல செய்தி அனுப்ப. எப்போ வேணும்னாலும் நிறுத்த சொல்லலாம்.
- போலி பதிவை தடுக்க.
- எந்த ஃப்ளையர் / ஆட் வழியா வந்தீங்கனு புரிய — உங்கள் எண்ணை விற்க இல்ல.
யாருக்கு பகிர்கிறோம்
நீங்கள் அனுப்பும் உறுதிச் செய்தியை WhatsApp (Meta) கொண்டு செல்லும்.
வலைத்தளத்தை Vercel ஹோஸ்ட் செய்கிறது.
கட்டணப் பதிவுகளை Navvi Corporations சார்பாக Razorpay செயலாக்குகிறது. கட்டணத்தை முடித்து பதிவு செய்ய தேவையான பரிவர்த்தனைத் தகவலை Razorpay பெறும்.
HabitEasy உள்ளே லீட் வெப்ஹூக் அமைத்திருந்தால், கோச்கள் ஸ்லாட்டை உறுதி செய்ய அந்த கருவிக்கு பதிவு போகும். பெயர் / எண்ணை விளம்பரதாரர்களுக்கு விற்க மாட்டோம்.
குக்கீ மற்றும் டிராக்கிங்
மொழியும் உள்ளூர் புக் கவுண்டும் உங்கள் பிரவுசரிலேயே இருக்கும்.
Meta Pixel, Google Analytics அல்லது GTM இயங்கினால், பக்கப் பார்வை / பட்டன் கிளிக் அந்த நிறுவனத்துக்கு போகலாம். படிவம் வேலை செய்ய அது தேவையில்லை. பிரவுசரில் குக்கீயை தடுக்கலாம்.
எவ்வளவு காலம் வைத்திருப்போம்
அந்த வாரம் / பேட்சை நடத்தவும், நியாயமான பதிவுக்காகவும் (பொதுவா 12 மாதம் வரை) வைத்திருப்போம். சட்டம் அதிகம் கேட்டால் அதற்கேற்ப. நன்றி குக்கீ சுமார் ஒரு மணி நேரத்தில் முடியும்.
உங்கள் உரிமை (DPDP)
நாங்கள் வைத்திருக்கும் பதிவை பார்க்க, திருத்த, நீக்க, அல்லது வாட்ஸ்அப் நிறுத்த WhatsApp-ல் கேளுங்கள். நீங்கள் அனுப்பிவிட்ட வாட்ஸ்அப் மெசேஜை எங்களால் திரும்ப எடுக்க முடியாது.
இந்த பக்கங்கள் 18 வயது முடிந்தவர்களுக்கானவை.
